கடந்த ஜூன் 18ம் திகதி சீக்கிய பிரிவினை வாதியான Hardeep Singh Nijjar கனடாவில் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். கனடாவுக்கு Five Eyes நாடுகள் வழங்கிய உளவுகளின் அடிப்படையில் இந்த கொலையில் இந்தியாவின் கை இருப்பதாக கனடிய பிரதமர் ரூடோ இந்தியா மீது குற்றம் சுமத்தி இருந்தார்.
கனடா தம் மீது பகிரங்கமாக குற்றம் சுமத்தியதால் வெகுண்டு எழுந்தது மோதி தலைமையிலான இந்திய அரசு. கூடவே இந்திய ஊடகங்களும் கனடா மீது வெகுண்டு எழுந்து உள்ளன.
இந்த நிலையில் இலங்கையின் Ali Sabry என்ற வெளியுறவு அமைச்சரும் இந்தியாவின் உதவிக்கு (அல்லது கனடா மீதான காழ்ப்பு கொட்டலுக்கு) வந்துள்ளார். கனடா தான் புலிகளை பயங்கரவாதிகள் என்று பட்டியலிட்ட பின்னரும் கனடாவில் புலிகளை தடையின்றி வளர்ப்பதை ஒப்பிட்டு காட்டியுள்ளார் Sabry. தனது உரையில் “some of the terrorist have found safe haven in Canada” என்று கூறியுள்ளார் Sabry.
இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் Milinda Moragoda வும் Nijjar விசயத்தில் இலங்கை இந்தியாவின் பக்கம் என்றுள்ளார் (I think as far as we are concerned, we support India on that).
அத்துடன் தனது 40 ஆண்டுக்கால வாழ்வில் பயங்கரவாதத்தை இலங்கையில் சந்தித்ததாகவும் கூறியுள்ளார் Moragoda (40 years of my life, have been spent facing various forms of terrorism in Sri Lanka). அந்த 40 ஆண்டு காலத்துள்ளேயே இலங்கை சனாதிபதி ஜூலியஸ் ரிச்சர்ட் (JR) இந்தியா பயங்கவாதிகளை (புலிகளை) வளர்ப்பதாக BBC க்கு கூறியிருந்தார்.
இதே புலிகளை பாலூட்டி வளர்த்தது இந்தியாவே என்பதை Sabry யும், Moragoda வும், இந்திய ஊடகங்களும் மறந்துள்ளனவோ?
புலிகளை வளர்க்கும் கனடா பயங்கரவாதிகளை வளர்க்கும் நாடாக தெரியும் இலங்கைக்கு அதே புலிகளை பாலூட்டி வளர்த்த இந்தியா எப்படி இப்போது பயங்கவாதிகளுக்கு எதிரான நாடாக தெரிகிறது?
அல்லது அந்த கதை ஏன் இப்ப என்கிறார்களோ?
சீக்கிய மற்றும் புலிகள் விசயங்களில் கனடாவும் ஒன்றும் தெரியாத பாப்பா இல்லை.