லிபியா வெள்ளத்துக்கு 2,000 பேர் பலி, 6,000 தொலைவு

லிபியா வெள்ளத்துக்கு 2,000 பேர் பலி, 6,000 தொலைவு

வட ஆபிரிக்க நாடான லிபியாவில் இடம்பெற்ற வெள்ளத்துக்கு குறைந்தது 2,000 பலியாகி உள்ளதுடன், சுமார் 6,000 பேர் இடமறியாதும் உள்ளனர். Daniel என்ற சூறாவளி கிழக்கு லிபியாவை தாக்கியதாலேயே இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மேலே கூறப்பட்ட 2,000 பேர் Derna என்ற நகரில் பலியானோர் தொகை மட்டுமே Al-Bayda, Al-Marj, Tobruk, Takenis, Battah ஆகிய இடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

மழை வீழ்ச்சியால் அணைகள் நிரம்பி உடைந்ததாலேயே திடீரெனெ வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

லிபியாவின் தலைநகர் திரிபோலியில் ஐ.நா. ஆதரவு கொண்ட அரசு ஆட்சி செய்ய, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு பகுதி பெங்காசி நகரை தளமாக கொண்ட இராணுவ குழு ஒன்றின் கட்டுப்பாட்டில் உள்ளது.