மாலைதீவில் சனிக்கிழமை இடம்பெற்ற சனாதிபதி தேர்தலில் எவரும் தேவையான 50% வாக்குகளை பெற்றிருக்கவில்லை. அதனால் முன்னனியில் உள்ளவர்களுக்குள் இரண்டாம் சுற்று தேர்தல் இடம்பெறும்.
சுமார் 75% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் India-first என்ற இந்திய ஆதரவு கொண்ட தற்போதைய சனாதிபதி Ibrahim Solih 40% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
India-out என்று கூறும் சீன ஆதரவு கொண்ட Mohamed Muizzu 46% வாக்குகளை பெற்றுள்ளார். முன்னாள் சனாதிபதி தேர்தலில் பங்கெடுப்பதை Solih அரசு தடுத்ததால் Muizzu போட்டியிட்டுள்ளார்.
Muizzu தான் பதவிக்கு வந்தால் மாலைதீவில் உள்ள சிறிய இந்திய பாடையை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவேன் என்றுள்ளார்.