அதானியின் இலங்கை காற்றாலை மின் திட்டம் குழப்பத்தில்

அதானியின் இலங்கை காற்றாலை மின் திட்டம் குழப்பத்தில்

இந்திய பிரதமர் மோதிக்கு நெருங்கியவரான அதானியின் Adani Green Energy Limited இலங்கையில் அமைக்கவுள்ள காற்றாலை (wind power) மூலமான 500 மெகாவாட் (500 MW) மின் உற்பத்தி திட்டம் தொடர்ந்தும் இழுபறியில் உள்ளது.

சுமார் $400 மில்லியன் பெறுமதியான இந்த திட்டம் சட்டப்படி இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான இணக்கமா அல்லது இலங்கை அரசுக்கும் அதானி நிறுவனத்துக்கும் இடையிலான இணக்கமா என்பதே குழப்பத்துக்கு காரணம்.

இலங்கை Electricity Act சட்டப்படி இலங்கை அரசு தனியார் நிறுவனம் ஒன்றுடன் திட்டம் ஒன்றில் பொது கேள்வி (public tender) மூலமே தெரிவு செய்து உடன்படலாம்.

ஆனால் இலங்கை அரசு மேற்படி 500 MW திட்டத்தை அதானிக்கு கேள்வி இன்றியே வழங்கி உள்ளது. 

2022ம் ஆண்டு இலங்கை மின்சார சபை (CEB) அதிகாரி M.M.C. Ferdinando இந்த திட்டத்தை அதானிக்கு வழங்கவேண்டும் என்றும் அதையே மோதி விரும்புகிறார் என்றும் அன்றைய சனாதிபதி கோட்டபாய கூறியதாக தெரிவித்திருந்தார். நெருக்கடி காரணமாக பின்னர் இக்கூற்று பின் வாங்கப்பட்டது.

மோதியின் இந்திய அரசு இந்த திட்டத்தை இந்திய அரச திட்டம் என்று இதுவரை கூறவில்லை. அவ்வாறு செய்ய அவசியமான படிகளை இந்தியா செய்திருக்கவில்லை என்றால் இதை இந்திய அரச திட்டம் என்று இலகுவில் கூற முடியாது.

இந்த குழப்பத்தை திருத்தாவிடில் அதானியின் முதலீட்டுக்கு வரும் காலத்தில் குந்தகம் ஏற்படலாம்.