வரும் 7ம் திகதி முதல் 10ம் திகதி வரை இந்திய தலைநகர் டெல்லியில் இடம்பெறவுள்ள G20 நாடுகளின் அமர்வுக்கு சீன சனாதிபதி சீ வராமைக்கு அமெரிக்க சனாதிபதி பைடென் கவலை தெரிவித்துள்ளார்.
Delaware மாநிலத்தில் உள்ள Rehoboth Beach என்ற இடத்தில் நேற்று ஞாயிறு பத்திரிகையாளருடன் உரையாடுகையில் சீ வராமையால் “I am disappointed… but am going to get to see him” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சீ இந்தியா வராமைக்கு பைடெனை சந்திக்க விரும்பாமை காரணமாக இருக்கலாம். இந்தியா செல்லும் பைடென் பின் வியட்நாமும் செல்லவுள்ளார். வியட்நாமை சீனாவுக்கு எதிராக பைடென் பயன்படுத்தக்கூடும்.
இந்தியாவும், வியட்நாமும் அமெரிக்காவுடன் “much closer relations” கொண்டிருக்க விரும்புகின்றன என்று பைடென் கூறியுள்ளார்.