ரஷ்யாவுக்கு வட கொரியா ஆயுதம், அமெரிக்கா விசனம்

ரஷ்யாவுக்கு வட கொரியா ஆயுதம், அமெரிக்கா விசனம்

ரஷ்யாவுக்கு வட கொரியா ஆயுதங்களை வழங்க உள்ளது என்று அறிந்த அமெரிக்கா வட கொரியா மீது விசனம் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பேச்சாளர் John Kirby “ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்கும் பேச்சுக்களை கைவிடுமாறு DPRK அரசை கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

ஆனால் தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா பெரும் ஆயுத பயிற்சிகளில் ஈடுபடுவதால் வட கொரியா அமெரிக்காவை உதாசீனம் செய்கிறது.

அமெரிக்காவின் உளவு ரஷ்ய-வட கொரிய ஆயுத பேச்சுக்களை அறிந்திருந்தாலும் அமெரிக்கா அந்த விவரங்களை வெளியிடவில்லை.