Gabon என்ற ஆபிரிக்க நாட்டில் இன்று புதன் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. கடந்த கிழமை இறுதியில் அங்கு இடம்பெற்ற தேர்தல் முறையற்றது என்று கூறியே இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
ஆட்சியை கைப்பற்றிய இராணுவம் அனைத்து அரச நிலையங்களையும், எல்லைகளையும் மூடுவதாக அறிவித்து உள்ளது.
தேர்தல் திணைக்களம் தற்போதைய சனாதிபதி Ali Bongo Ondimba மூன்றாம் முறையாக வென்றுள்ளார் என்று அறிவித்த பின்னரே இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. Bongo 64.27% வாக்குகளை பெற்றதாக தேர்தல் திணைக்களம் அறிவித்து இருந்தது.
தற்போதைய சனாதிபதியின் தந்தை 1967ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர். அவர் மரணித்த உடன் அக்கால பாதுகாப்பு அமைச்சரான மகன் சனாதிபதி ஆகியிருந்தார்.