பூட்டின் இந்திய G20 அமர்வுக்கு இந்தியா பயணிக்கார்

பூட்டின் இந்திய G20 அமர்வுக்கு இந்தியா பயணிக்கார்

அடுத்த மாதம் இந்தியாவில் இடம்பெறவுள்ள G20 அமர்வுக்கு தான் பயணிக்கேன் என்றும் தனக்கு பதிலாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சரே பயணிப்பார் என்றும் ரஷ்ய சனாதிபதி பூட்டின் இந்திய பிரதமர் மோதிக்கு நேற்று திங்கள் தொலைபேசி மூலம் கூறியுள்ளார்.

யூக்கிறேன் மீதான பூட்டினின் தாக்குதலும் அதனால் அவர் மீது உள்ள International Criminal Court வழக்குகளுமே காரணம் என்று கருதப்படுகிறது.

கடந்த கிழமை தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற BRICS அமர்வுக்கும் பூட்டின் நேரடியாக பயணிக்காது இணையம் மூலமே பங்களித்து இருந்தார்.

தன் மீதான தடை காரணமாக கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் இடம்பெற்ற G20 அமர்வுக்கும் பூட்டின் பயணித்து இருக்கவில்லை.