தாராவி வளமாக்கல் உரிமை அதானிக்கு, மக்கள் எதிர்ப்பு

தாராவி வளமாக்கல் உரிமை அதானிக்கு, மக்கள் எதிர்ப்பு

மும்பாயில் உள்ள மிக பெரிய குப்பமாகிய (slums) தாராவியை (Dharavi) அபிவிருத்தி செய்யும் உரிமையை இந்திய பிரதமர் மோதியின் நெருங்கிய நண்பரான அதானிக்கு வழங்குவதை தாராவி மக்கள் எதிர்க்கின்றனர்.

கட்டுமான காலத்தில் தம்மை வெளியேற்றி பின் அங்கு வரவிடாமல் தடுக்கும் சாத்தியம் உண்டு என்கின்றனர் தாராவி மக்கள்.

2018ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் முதல் தடவையாக தாராவி அபிவிருத்திக்கு விண்ணப்பங்களை கேட்டிருந்தது. அப்போது டுபாயை தளமாக கொண்ட SecLink நிறுவனம் அதிக பணம் வழங்க முன் வந்திருந்தது. ஆனால் மஹாராஷ்ட்ரா மாநில அரசு அபிவிருத்தி முயற்சியை காரணம் இன்றி இரத்து செய்திருந்தது.

அதனால் SecLink தற்போது மாநில அரசுக்கும், அதானிக்கும் எதிராக நட்டஈடு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

மாநில அரசு புதிய விதிமுறைகளுடன் மீண்டும் 2022ம் ஆண்டு அபிவிருத்தி முயற்சியை ஆரம்பித்தது. இம்முறை SecLink போட்டியிடவில்லை. சென்ற ஜூலை மாதம் மகாராஷ்ரா மாநிலம் அதானியின் புதிய $614 மில்லியன் திட்டத்தை ஏற்றுக்கொண்டிருந்தது. Consultancy Liases Foras கணிப்பின்படி தாராவில் அதானி $12 பில்லியன் செலவளித்து பின் $24 வருமானம் பெறலாம் என்று கூறப்படுகிறது.