ஏற்றுமதி புழுங்கல் அரிசிக்கு இந்தியா மேலதிக 20% வரி

ஏற்றுமதி புழுங்கல் அரிசிக்கு இந்தியா மேலதிக 20% வரி

ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசிக்கு (parboiled rice) இந்தியா மேலதிகமாக 20% வரி அறவிட திடீரென அறிவித்துள்ளது. இந்த புதிய வரி உடனடியாக நடைமுறை செய்யப்படும்.

இந்தியாவில் அரிசியின் விலையை குறைப்பதே இந்திய அரசின் நோக்கம். இது அங்கு உணவு பொருட்களின் விலைவாசி அதிகரிப்பதை கட்டுப்படுத்த உதவும்.

கடந்த மாதம் இந்தியா பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்து இருந்தது. பின் உடைத்த அரிசி ஏற்றுமதியையும் தடை செய்திருந்தது. இதனால் உலக அளவில் அரிசி விலை கடந்த 12 ஆண்டுகளில் அதி உயர் விலையை அடைந்துள்ளது..

2022ம் ஆண்டில் இந்தியா 7.4 மில்லியன் தொன் புழுங்கல் அரிசியை உலகுக்கு ஏற்றுமதி செய்திருந்தது.

உலகுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் 40% அரிசியை இந்தியாவே ஏற்றுமதி செய்கிறது.