வாக்னர் (Wagner) என்ற தனியார் இராணுவத்தின் தலைவர் Yevgeny Prigozhin இன்று இடம்பெற்ற விமான விபத்து ஒன்றில் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரஷ்ய அதிகாரிகளின் கூற்றுப்படி Embraer-135 வகை விமானம் ஒன்று 10 பேருடன் மொஸ்கோவில் இருந்து St. Petersburg பறக்கையில் Kuzhenkino என்ற கிராமத்தில் விழுந்துள்ளது. அதில் பயணித்த அனைவரும் பலியாகி உள்ளனர்.
எரிந்துகொண்டிருக்கும் விமானத்தில் 2795 என்ற எண் எழுதப்பட்டு உள்ளது. வாக்னர் தலைவரின் விமான பதிவு இலக்கம் RA-02795.
விழுந்த விமானத்தின் பயணிகள் பட்டியலில் வாக்னர் தலைவரின் பெயரும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டு தினங்களுக்கு முன் இவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்ததாக ஒரு வீடியோ வெளியாகி இருந்தது.
பூட்டினின் முன்னாள் நண்பரான வாக்னர் தலைவர் தனது படையை பயன்படுத்தி பூட்டினுக்கு எதிராக ரஷ்யாவில் அண்மையில் இராணுவ சதி ஒன்றை செய்ய முயன்று தோல்வி காண்டுருந்தவர்.