BRICS (Brazil, Russia, India, China, South Africa) அணி இந்த கிழமை தென் ஆபிரிக்காவில் கூடுகிறது. இந்த அமர்வில் BRICS மேலும் நாடுகளை இணைப்பதா என்பதை ஆலோசிக்கும்.
சுமார் 22 நாடுகள் BRICS அணியில் இணைய விருப்பம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நாடுகளின் விருப்பங்களுக்கு காரணங்கள் பல என்றாலும், அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளின் பிடிகளில் இருந்து தம்மை பாதுகாப்பதே பிரதான காரணம்.
அர்ஜென்டீனா, மெக்ஸிகோ, ஈரான், சவுதி அரேபிய, UAE, எகிப்து, நைஜீரியா, பங்களாதேஷ் ஆகியன மேற்படி 22 நாடுகளுள் அடங்கும்.
BRICS மேற்குக்கு போட்டியாக வளர்வதை சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் விரும்பினாலும் அது தற்போது அமெரிக்காவுடன் உறவை வளர்க்கும் இந்தியாவுக்கு இடராக அமையும்.
அத்துடன் புதிதாக இணைய விரும்பும் நாடுகள் பொதுவாக சீனாவுக்கு நெருக்கமானவை என்றபடியால் பெருபிக்கப்படும் BRICS அணிக்கு உள்ளேயும் இந்தியாவின் ஆளுமை குறையும்.
BRICS மேலும் நாடுகளை இணைத்தால் அந்த புதிய அணி அமெரிக்காவை தலைமையாக கொண்ட G7 அணிக்கு பலத்த போட்டியாக அமையும்.
2009ம் ஆண்டு 4 நாடுகளுடன் ஆரம்பித்த BRICS அணி பின்னர் தென் ஆபிரிக்காவை இணைத்தது.
யுக்கிறேன் யுத்தம் காரணமாக பூட்டின் இணையம் மூலமே மேற்படி அமர்வில் பங்கு கொள்வார்.