உலக சந்தைக்கு தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக உள்ள பங்களாதேசம் இலங்கையில் தயாரிக்கப்படும் ஆடைகளிலும் குறைந்த விலைக்கே ஆடைகளை விற்பனை செய்கிறது.
சுமார் $182 பில்லியன் பெறுமதியான ஆடைகளை ஏற்றுமதி செய்யும் சீனா முதலாம் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் சுமார் $46 பில்லியன் பெறுமதியான ஆடைகளை ஏற்றுமதி செய்யும் பங்களாதேசம் உள்ளது.
2022ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற தைத்த ஆடைகளின் விலை கிலோ ஒன்றுக்கு $22.48 ஆக இருந்துள்ளது. பங்களாதேசம் கிலோ ஒன்றை $17.27 ஆக விற்பனை செய்துள்ளது. ஆனால் இலங்கையில் அது $28.54 ஆகவும், இந்தியாவில் அது $23.27 ஆகவும் இருந்துள்ளது.
ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடைகளை சதுர மீட்டர் என்ற அலகில் பார்த்தல் பங்களாதேசம் சதுர மீட்டர் ஒன்ருக்கு $3.21 ஆறவிட்டு உள்ளது. இலங்கை $4.26ம், இந்தியா $3.80ம் ஆறவிட்டு உள்ளன.