அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் இடம் பெறும் காட்டு தீக்கு புதன்கிழமை வரை 36 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக அங்குள்ள இரண்டாவது பெரிய தீவான Maui தீவிலேயே அதிகம் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
Maui தீவு மக்கள் வேகமாக பரவி வந்த காட்டுத்தீயில் இருந்து தப்பும் நோக்கில் பசிபிக் கடலுள் சென்றுள்ளனர்.
ஹவாய், Maui ஆகியன அமெரிக்காவின் பிரதான உல்லாச பயண இடங்களாகும். இதுவரை சுமார் 11,000 உல்லாச பயணிகள் தமது இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.
நூற்றுக்கணக்கான மைல்கள் தெற்கே நகரும் Dora என்ற சூறாவளியும் காட்டுத்தீ பரவலை வலிமைப்படுத்தி உள்ளது.