சீனாவை தளமாக கொண்டு இயங்கும் நவீன தொழிநுட்ப நிறுவனங்களில் முதலிட அமெரிக்காவின் பைடென் அரசு தடை விதிக்க அறிவித்துள்ளது. இந்த தடை அடுத்த ஆண்டே நடைமுறைக்கு வரும் என்றாலும், அதுவரை மக்களின், நிறுவனங்களின் கருத்துக்களை பைடென் அரசு உள்வாங்கும்.
Semiconductors மற்றும் microelectronics, quantum தொழில்நுட்பம், artificial intelligence தொழில்நுட்பம் ஆகிய 3 துறைகளே இந்த தடைக்குள் அடங்கும். அத்துடன் புதிய முதலீடுகளுக்கு மட்டுமே இந்த தடை நடைமுறை செய்யப்படும், பழைய முதலீடுகள் கண்காணிக்கப்படும்.
இந்த அறிவிப்பால் சீனா விசனம் கொண்டுள்ளது. தாம் இதற்கு தகுந்த பதில் நடவடிக்கை எடுக்கும் உரிமை கொண்டுள்ளதாக என்று சீனா அறிவித்துள்ளது.
மேற்படி துறைகளின் தற்போது அமெரிக்கா, நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன. அதேவேளை சீனா பெரும் முதலீடுகள் மூலம் தந்து சொந்த வல்லமையை இத்துறைகளில் வளர்க்க கடும் முயற்சி செய்கிறது.
2021ம் ஆண்டு அமெரிக்க venture-capital நிறுவனங்கள் $32.9 பில்லியன் பணத்தை சீனாவில் முதலிட்டு இருந்தன. ஆனால் 2022ம் ஆண்டில் அத்தொகை $9.7 பில்லியன் ஆக குறைந்து இருந்தது. இந்த ஆண்டு இதுவரை $1.2 பில்லியன் மட்டுமே அமெரிக்காவால் முதிலீடு செய்யப்பட்டுள்ளது.