ராகுல் காந்தியின் தண்டனை இடைநிறுத்தம்

ராகுல் காந்தியின் தண்டனை இடைநிறுத்தம்

ராகுல் காந்தி மீது விதிக்கப்பட்ட தண்டனையை இந்திய உயர் நீதிமன்றம் இன்று இடைநிறுத்தி உள்ளது. அதனால் ராகுல் காந்தி மீண்டும் பாராளுமன்றம் செல்வார். அத்துடன் அடுத்த ஆண்டு தேர்தலிலும் அவர் போட்டியிடக்கூடும்.

ராகுல் இந்திய பிரதமரை Modi என்ற பெயர் கொண்ட இன்னோர் திருடனுடன் ஒப்பிட்டு அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு குஜராத் கீழ் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அந்த தீர்ப்பை நிராகரிக்க குஜராத்தின் மேல் நீதிமன்றமும் மறுத்தது. குஜாராத் பா.ஜ. ஆட்சியில் உள்ள மாநிலம்.

ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தாலும் அவர் இதுவரை பிணையில் வீடு சென்றிருந்தார்.

இந்த வழக்கை கையெடுத்து இந்தியாவின் உயர் நீதிமன்றம் (Supreme Court) இன்று வெள்ளி ராகுல் மீதான தீர்ப்பை இடைநிறுத்தம் செய்துள்ளது.

அதனால் பறிக்கப்பட்ட பாராளுமன்ற ஆசனமும் மீண்டும் ராகுலுக்கு வழங்கப்படும்.

கீழ் நீதிமன்றம் அதிகூடிய தண்டனையை வழங்கிமைக்கான காரணத்தை கூறியிருக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் காரணம் காட்டியுள்ளது.