கனடிய பிரதமர் விவாக பிரிவில்

கனடிய பிரதமர் விவாக பிரிவில்

கனடிய பிரதமர் Justin Trudeau வும் அவரின் மனைவி Sophie Gregoire யும் பிரிந்து செல்ல இணங்கி உள்ளதாக அறிவித்துள்ளனர். எதிர்பாராத இந்த அறிவிப்பால் கனடிய அரசியல் திகைத்துள்ளது.

தாம் ஏன் தமது 18 ஆண்டு திருமண வாழ்வை முறித்து கொள்கின்றனர் என்று கூறவில்லை. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உண்டு.

விவாக பிரிவு பெற்றாலும், ரூடோ தொடர்ந்தும் அரசியலில் பங்கு கொள்வார் என்று கூறப்படுகிறது.

கனடாவின் மொன்றியல் நகரில் பிறந்த Sophie Gregoire BA பட்டம் பெற்றவர்.

ஜஸ்டின் ரூடோவின் தந்தை முன்னாள் கனடிய பிரதமர் Pierre Trudeau வும் 1977ம் ஆண்டு பதவியில் இருக்கையிலேயே தனது மனைவி Margaret உடன் பிரிவை அடைந்தவர்.

அண்மைக்காலங்களில் ஜஸ்டினின் ஆதரவு சரிந்து வந்துள்ளது. பெரும்பான்மை அரசை அமைக்கும் நோக்கில் கடைசி தேர்தலை காலத்துக்கு முன் செய்திருந்தாலும் சிறுபான்மை ஆட்சியே கிடைத்திருந்தது.

கனடாவில் அடுத்த தேர்தல் 2025ம் ஆண்டு இடம்பெறும்.