இலங்கையில் பெரும் முதலீடுகளை செய்ய ஜப்பானுக்கு இலங்கை மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக சக்தி, சிறிய ரயில் கட்டுமானம், துறைமுக கட்டுமான ஆகிய பணிகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை அழைத்துள்ளது.
ஆனால் ஜப்பான் தனது பதிலை இதுவரை தெரிவிக்கவில்லை. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாத ஆட்சி இலங்கையில் இருப்பதுவும் ஜப்பானின் தயங்களுக்கு காரணம் ஆகலாம்.
ஜப்பானின் உதவியுடன் $2 பில்லியன் செலவில் ஆரம்பிக்கப்பட்ட சிறிய ரயில் (light rail) திட்டத்தை இலங்கை 2020ம் ஆண்டு முன்னறிவிப்பு இன்றி இடைநிறுத்தி இருந்தது. அதையும் மீண்டும் ஆரம்பிக்க இலங்கை கேட்டுள்ளது.
தற்போதைய ரணில் ஆட்சியில் ஜப்பானுடனான உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
தற்போது இலங்கையில் உள்ள ஜப்பானிய வெளியுறவு அமைச்சரிடமே இந்த அழைப்பு முன்வைக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய அமைச்சர் இந்தியா, மாலைதீவு, எத்தியோப்பியா, உகண்டா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்கிறார்.