மேற்கு ஆபிரிக்க நாடான நிஜரில் (Niger) புதன்கிழமை இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அந்நாட்டின் சனாதிபதியின் காவலுக்கு பொறுப்பான presidential guard என்ற இராணுவ அணியே சனாதிபதியை முடங்கி வைத்துள்ளது. இராணுவ தலையகமும் தனது ஆதரவை கவிழ்ப்புக்கு வழங்கி உள்ளது.
அந்நாட்டு தொலைக்காட்சியில் கவிழ்ப்பை அறிவித்த இராணுவம் சகல அரசியல் நடவடிக்கைகளையும் தடை செய்துள்ளதாக கூறியுள்ளது.
முற்காலங்களில் பிரான்சின் ஆக்கிரமிப்பில் இருந்த நிஜர் மக்கள் பொதுவாக பிரான்ஸ் மீது காழ்ப்பு கொண்டுள்ளனர். இராணுவ கவிழ்ப்பின் பின் சிலர் ரஷ்ய கொடிகளை தாங்கி சென்றுள்ளனர்.
அல்கைடா போன்ற இராணுவ குழுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த மேற்கு நாடுகளுக்கு நிஜர் போன்ற நாடுகளின் உதவி அவசியம். ஆனால் மாலி (Mali) என்ற நாட்டில் இருந்த பிரெஞ்சு இராணுவம் நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு நிஜருக்கு நகர்ந்து இருந்தது.
மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளில் கடந்த 3 ஆண்டுகளில் நிகழும் 7 ஆவது இராணுவ கவிழ்ப்பு இதுவாகும்.