மேலும் ஒரு இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு தடை

மேலும் ஒரு இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு தடை

இந்தியாவில் மேலும் ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்துக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. Marshall Islands, Micronesia ஆகிய இடங்களில் இந்த நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து உடலுக்கு தீங்கான பொருட்களை கொண்டிருந்தமையே தடைக்கு காரணம்.

புஞ்சாப் மாநிலத்து QP Pharmachem Ltd. என்ற நிறுவனமே தடைக்கு உள்ளாகியது. ஏற்கனவே Maiden Pharmaceuticals, Marion Biotech ஆகிய நிறுவனங்கள் மேற்படி மருந்து காரணமாக தடை செய்யப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கை ஒன்றின் பின்னரே இந்தியா மேற்படி தடையை அறிவித்துள்ளது. WHO தனது அறிக்கையில் மேற்படி மருந்து ஆபத்தான அளவில் diethylene glycol, ethylene glycol ஆகிய இரசாயண பொருட்களை கொண்டுள்ளதாக கூறியுள்ளது.

கடந்த ஆண்டு Gambia, Uzbekistan ஆகிய நாடுகளில் 89 சிறுவர்கள் இந்திய இருமல் மருந்துக்கு பலியாகி இருந்தனர்.