YouGov என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட கருத்து கணிப்பில் 63% பிரித்தானியர் தமது நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது தவறு (failure) என்று கூறியுள்ளனர்.
கணிப்பில் பங்கு கொண்டோரில் 12% பேர் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளிறியது நல்ல பயன் என்றுள்ளனர்.
2016ம் ஆண்டு பொது வாக்கெடுப்பில் Brexit பெரும்பான்மை ஆதரவை பெற்று இருந்தது.
அத்துடன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வாக்கெடுப்பு நிகழ்ந்தால் 55% பேர் தாம் மீண்டும் ஆதரவு வழங்குவோம் என்றுள்ளனர். 2021ம் ஆண்டு இந்த வீதம் 49% ஆக மட்டுமே இருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால் முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் பிரித்தானியாவுக்கு புதியதோர் பொருளாதார இணக்கம் ஒன்றை தருவார் என்று கருதப்பட்டது. ஆனால் அது இன்றுவரை நிறைவேறவில்லை.