Facebook இணையத்தை ஆரம்பித்த Mark Zuckerberg கடந்த அமெரிக்க சுதந்திர தினத்தன்று தனது குடும்ப படம் ஒன்றை Instagram இணையத்தில் பதிவு செய்திருந்தார். ஆனால் அதில் தனது இரண்டு பெண் பிள்ளைகளின் முகங்களை மற்றவர் அடையாளம் காண முடியாதவாறு மறைத்துள்ளார்.
மற்றவர்கள் தமது படங்களை Facebook இணையத்தில் உலகம் அறிய பதிவதை ஊக்குவிக்கும் Mark அந்த கொள்கை மூலம் பெரும் பணம் உழைத்துள்ளார். மற்றவர் தமது படங்களை பதிவதை மட்டுமன்றி, தமக்கு தெரிந்தவர்களின் படங்களையும் பதிவதை Facebook ஊக்கிவித்து வந்துள்ளது. ஆனால் எவரும் Mark கின் பிள்ளைகளின் படங்களை பதிவு செய்ய முடியாது.
Mark கை பார்த்து மற்றவரும் தமது குழந்தைகளின் முகங்களை மறைக்கலாம். அது Facebook கின் வருமானத்துக்கு பாதகம் என்றாலும் அவரின் குழந்தைகளுக்கு உள்ள உரிமை உங்கள் குழந்தைகளுக்கும் உண்டு.
இங்கே முகங்கள் மறைக்கப்பட்ட இருவரும் Mark கின் 5 மற்றும் 7 வயது பெண் பிள்ளைகள்.
படம்: Instagram