உலக அளவில் பொதுமக்கள் கடன் தற்போது $92 டிரில்லியன் ஆக அதிகரித்து உள்ளது என்று ஐ. நா. வெளியிட்ட அறிக்கை ஒன்று இன்று கூறியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் உலக பொதுக்கடன் 5 மடங்கால் அதிகரித்து உள்ளது. ஆனால் உலக பொருளாதார வளர்ச்சி (GDP) 3 மடங்கால் மட்டுமே அதிகரித்து உள்ளது.
2002ம் ஆண்டில் $17 டிரில்லியன் ஆக இருந்த உலக பொதுக்கடன் தற்போது $92 டிரில்லியன் ஆக அதிகரித்து உள்ளது. அதில் சுமார் 30% வளரும் நாடுகளின் கடன்.சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளும் வளரும் நாடுகளாகவே கணிக்கப்படுகின்றன.
வளர்முக நாடுகள் பெருமளவு பணத்தை வட்டியில் செலவழிக்கின்றன. இந்த நாடுகளின் வட்டி செலவு கல்வி, சுகாதார செலவிலும் அதிகம்.
நாடுகளின் பொதுக்கடன்:
1. அமெரிக்கா: $30.985 டிரில்லியன்
2. சீனா: $13.555 டிரில்லியன்
3. ஜப்பான்: $11.061 டிரில்லியன்
4. பிரித்தானியா: $3,152 டிரில்லியன்
5. பிரான்ஸ்: $3.092 டிரில்லியன்
6. இத்தாலி: $2.911 டிரில்லியன்
7. இந்தியா: $2.815 டிரில்லியன்
8. ஜெர்மனி: $2.711 டிரில்லியன்
9. பிரேசில்: $1.653 டிரில்லியன்
10. ஸ்பெயின்: $1.568 டிரில்லியன்