இந்தியாவில் மிகையான மன்சூன் மழை பல இடங்களை பெருவெள்ளத்தில் அமிழ்த்தி உள்ளது. தலைநகர் டெல்லியில் சில இடங்கள் முழங்கால் அளவு வெள்ளத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
மழைக்கும், மண்சரிவுகளுக்கும் இதுவரை குறைந்தது 15 பேர் பலியாகி உள்ளனர்.
இதுவரை பொழிந்த 153 mm மழை கடந்த 40 ஆண்டுகளில் ஜூலை மாதத்துக்கான அதிகூடிய மழை வீழ்ச்சியை வழங்கியுள்ளது. மழை காரணமாக அங்கு பாடசாலைகள் மூடப்பட்டு உள்ளன.
ஹிமாச்சல் மாநிலத்தில் மட்டும் சுமார் 700 வீதிகள் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்து போக்குவரத்துக்கு தடையாக உள்ளன.
வட இந்தியாவில் மேலும் பெருமளவு மன்சூன் மலை வீழ்ச்சி தொடரும் என்று வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது.