டியேகோ கார்சியாவுக்கு இரகசிய அமெரிக்க இணையம்

டியேகோ கார்சியாவுக்கு இரகசிய அமெரிக்க இணையம்

டியேகோ கார்சியா (Diego Garcia) என்ற இந்து சமுத்திர தீவுக்கு அமெரிக்காவின் இரகசிய இணைய இணைப்பு தொடுக்கப்பட்டுள்ளதாக Reuters செய்தி ஒன்று கூறுகிறது. இந்த இரகசிய இணைய இணைப்பு அமெரிக்க இராணுவத்தின் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படும்.

டியேகோ கார்சியாவில் அமெரிக்காவின் முப்படைகளும் தமது தளங்களை கொண்டுள்ளன.

இந்த cable இணைப்பை அமெரிக்காவின் SubCom என்ற நிறுவனம் செய்துள்ளது. இந்த நிறுவனமே Google, Facebook, Microsoft போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் தனியார் கடலடி cable இணைப்புகளை செய்கிறது.

பிரித்தானியா ஆக்கிரமித்த காலத்தில் இருந்து இது British Indian Ocean Territory (BIOT) என்ற பெயரில் பிரித்தானியாவின் கையிலேயே உள்ளது. ஆனால் 2019ம் ஆண்டு International Court of Justice (ICJ) டியேகோ கார்சியா மீண்டும் Mauritius க்கு வழங்கப்படவேண்டும் என்று கூறியுள்ளது.

1960களின் இறுதி காலத்தில் இருந்து பிரித்தானியா டியேகோ கார்சியாவை அமெரிக்க இராணுவ பயன்பாட்டுக்கு வழங்கி உள்ளது. மற்றவர்களை ICJ க்கு இழுக்கும் பிரித்தானியாவே அல்லது அமெரிக்காவோ தாம் ICJ தீர்மானத்துக்கு இணைக்குவதாக இதுவரை தெரிவிக்கவில்லை.

சீனாவும் அமெரிக்கா போலவே தமக்கு மட்டுமான இரகசிய கடல் அடி cable இணைப்புகளை செய்து வருகிறது.