ஆபிரிக்க நாட்டு 17 வயது இளைஞன் ஒருவன் பிரெஞ்சு போலீசால் சுட்டு கொலை செய்த பின் 3 தினங்களாக பிரான்சின் பல பகுதிகள் வன்முறையில் மூழ்கி உள்ளன.
செவ்வாய்க்கிழமை 17 வயது Nahel என்ற அல்ஜீரிய/மொராக்கான் Nanterre என்ற பரிசின் புறநகர் ஒன்றில் வாகன விதிமுறைகள் காரணமாக இரண்டு பொலிஸாரால் நிறுத்தப்பட்டான் அதில் ஒரு போலீஸ் அவசியம் எதுவும் இன்றி Nahel ஐ சுட்டு கொன்றார்.
தற்போது வன்முறைகள் பாரிஸ் நகர் மட்டுமன்றி, Marseille, Lyon, Toulouse, Strasbourg ஆகிய நகரங்களுக்கும் பரவி உள்ளன.
சில இடங்களில் ஊரடங்கு சட்டமும் நடைமுறை செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் பொது போக்குவரத்துக்கு சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
கலவரங்களை அடக்க சுமார் 40,000 போலீசார் அனுப்பப்பட்டு உள்ளனர். சுமார் 900 பேர் கைது செய்யப்படும் உள்ளனர். பல கடைகள் கொள்ளையிடப்பட்டும் உள்ளன.