இஸ்ரேல் தாம் ஆக்கிரமித்து உள்ள பலஸ்தீனர் West Bank இடங்களில் மேலும் 4,560 வீடுகளை கட்டி யூதர்களுக்கு வழங்க உள்ளதாக ஞாயிரு அறிவித்துள்ளது. ரஷ்யா யுக்கிறேனை ஆக்கிரமித்த பின் ஊளையிடும் நேட்டோ உட்பட மேற்கு நாடுகள் வழமைபோல் இஸ்ரேல் செயலை கண்டுகொள்ளவில்லை.
இந்த தீர்மானத்தால் தாம் deeply troubled என்று மட்டும் அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால் யுக்கிறேன் விசயத்தில் அமெரிக்கா தம் deeply troubled என்று கூறிவிட்டு இருக்கவில்லை.
இந்த புதிய திட்டம் ஏற்கனவே இஸ்ரேலால் சட்டவிரோதம் என்று அழிக்கப்பட்ட 4 யூதா குடியிருப்புகளையும் கூடவே அங்கீகாரம் செய்கிறது.
இந்த யூத குடியிருப்புகள் எல்லாம் சர்வதேச சட்டப்படி சட்டவிரோதம் என்றாலும் அமெரிக்காவின் ஆதரவில் இவற்றை இஸ்ரேல் செய்கிறது.
இவ்வகை செய்திகள் மேற்கு நாடுகளின் இஸ்ரேல் ஆதரவு கொண்ட ஊடகங்களில் மிக அருமையாகவே தெரிவிக்கப்படும்.