அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் விரைவில் இரு நாடுகளுக்கும் இடையில் உறவு நலம் (thaw) பெறும் என்றும் அமெரிக்க சனாதிபதி கூறியுள்ளார்.
இன்று ஞாயிறு G7 மாநாட்டு அமர்வுக்கு ஜப்பான் சென்றுள்ள பைடெனிடம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பைடென் பின்வருமாறு கூறினார்:
கடந்த நவம்பர் மாதம் தான் சீன ஜனாதிபதியுடன் உரையாடியபோது இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் hotline தொடர்பை ஏற்படுத்த இணங்கி இருந்ததாகவும், பெப்ரவரி மாதம் சீன பலூன் ஒன்று அமெரிக்காவுக்கு மேலே சுட்டு வீழ்த்தப்பட்ட பின் முரண்பாடு ஆரம்பித்ததாகவும் பைடென் கூறினார்.
பைடெனின் கூற்றுப்படி ஒரு சிறுபிள்ளை தன்மான (silly) பலூன் விசயத்தின் பின் Antony Blinken என்ற அமெரிக்க Secretary of State சீனா செல்வதை இரத்து செய்திருந்தார்.
அதன்பின் அமெரிக்காவின் hotline தொலைபேசி அழைப்புகள் அனைத்தையும் சீனா பதிலளிக்காது புறக்கணித்தது என்றும் கூறப்படுகிறது.