பெரும் இலஞ்சம் பெற்ற யூக்கிறேன் பிரதம நீதிபதி பதவி நீக்கம்

பெரும் இலஞ்சம் பெற்ற யூக்கிறேன் பிரதம நீதிபதி பதவி நீக்கம்

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு முன் ஊழல், இலஞ்சம் மிகையான நாடு யூக்கிறேன். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு பின்னும் அங்கு இலஞ்ச, ஊழல் கொடுமை தொடர்கிறது.

இன்று செவ்வாய் யூக்கிறேனின் பிரதம நீதிபதி Vsevolod Kniaziew இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பதிவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இவர் Finance and Credit என்ற நிறுவனத்திடம் இருந்து $2.7 மில்லியன் இலஞ்சம் பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை Specialized Anti-Corruption Prosecutor’s Office இன்று செய்துள்ளது. யூக்கிறேனில் மேற்படி இலஞ்சம் large-scale corruption ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இலஞ்சத்துக்கு ஈடாக மேற்படி நீதிபதி இலஞ்சம் வழங்கிய நிறுவனத்துக்கு ஆதரவாக நீதிமன்றில் தீர்ப்பை கூறவிருந்தார்.

யூக்கிறேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய ஒரு நிபந்தனையாக அங்கு ஊழல், இலஞ்சம் ஆகியன முற்றாக நீக்கப்பட்டால் அவசியம். ஆனால் யூக்கிறேனில் அது மிக கடினமான காரியம் ஆகவுள்ளது.