பிரித்தானியாவில் 10,000 பவுண்டுக்கு பொய் தந்தை

பிரித்தானியாவில் 10,000 பவுண்டுக்கு பொய் தந்தை

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழைந்திருக்கும் கருவுற்றுள்ள தாய் பிறக்க உள்ள தனது குழந்தைக்கு பிரித்தானிய குடியுரிமை கிடைக்க 10,000 பவுண்ட் வரையில் பணம் செலுத்தி பொய் பிரித்தானிய தந்தை பெறுகின்றனர். இதை தடுக்க முடியாது அதிகாரிகள் திண்டாடுகின்றனர்.

பிரித்தானிய சட்டப்படி அங்கு சட்டவிரோதமாக உள்ள தாய்க்கு பிறக்கும் குழந்தையின் தந்தை ஒரு பிரித்தானிய குடியினர் என்றால் பிறக்கும் குழந்தையும் பிறப்பிலேயே பிரித்தானிய குடியுரிமை பெறுகிறது.

அத்துடன் சட்டவிரோதமாக அங்குள்ள தாய்க்கும் வதிவிட உரிமை கிடைக்கிறது. அந்த தாய் பின்னர் குடியுரிமைக்கும் விண்ணப்பிக்கலாம்.

இந்த சட்டவிரோத வழியை இலங்கையர், இந்தியர், பாகிஸ்தானியர், பங்களாதேசத்தினர், நைஜீரியர் உட்பட பல சமூகங்களும் பயன்படுத்துகின்றன என்று கூறப்படுகிறது.

இந்த சேவை facebook போன்ற இணையங்கள் மூலம் செய்யப்படுகின்றன.

இந்த வகை சட்டவிரோத செயல்களை தடுக்க DNA சோதனை அவசியம் என்கின்றனர் சில அதிகாரிகள். தற்போது பிரித்தானியாவில் அவ்வகை சட்டம் இல்லை.

இவ்வாறு குடியுரிமை பெறும் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும் என்பதை இவ்வகை தாய்மார் உணராது உள்ளனர். குழந்தையின் பிறப்பு தந்தை பெயர் என்றுமே மாற்றப்படாது.