மேற்கு நாடுகள் உலக அளவில் கொண்டிருக்கும் கொள்கைகளை பிற நாடுகள் கேள்விக்கு உள்ளாக்கவில்லை, பதிலாக மேற்கு நாடுகள் நடுநிலைமையுடனா அந்த கொள்கைகளை நடைமுறை செய்கின்றன என்றே கேள்வி எழுப்புகின்றன என்று ஜெர்மனியின் அதிபர் Chancellor Olaf Scholz இன்று திங்கள் கூறியுள்ளார்.
குறிப்பாக இந்தியா, வியட்நாம், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் யூக்கிறேன் விசயத்தில் மேற்கு நாடுகள் கடைப்பிடிக்கும் கொள்கைகளை, எடுக்கும் நடவடிக்கைகளை ஏனைய நாடுகளில் செய்வது இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர் என்கிறார் ஜெர்மனியின் அதிபர்.
ரஷ்யா யூக்கிறேனை ஆக்கிரமித்தது போல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்து இருந்தது. இந்த ஆக்கிரமிப்பை கனடா, பிரான்ஸ் போன்ற பல நேட்டோ நாடுகள் நிராகரித்து இருந்தன. ஆனாலும் அமெரிக்காவுக்கு எதிராக எதையும் செய்யவில்லை. இந்த நாடுகள் அமெரிக்காவுடன் போரிட ஈராக்குக்கு ஆயுதங்களை வழங்கவில்லை.
இஸ்ரேல் பலஸ்தீனர் நிலங்களை ஆக்கிரமிப்பதை நேட்டோ நாடுகள் தடுப்பதில்லை.
மேற்கு அல்லாத நாடுகள் உலக சட்டங்களை நேட்டோ போன்ற மேற்கு நாடுகள் பக்க சார்பு இல்லாமல் நடைமுறை செய்யவேண்டும் என்றே கூறுகின்றனர் என்றுள்ளார் ஜேர்மன் அதிபர்.