தாய்லாந்தில் தேர்தல், இராணுவம் மீண்டும் ஏமாற்றுமா?

தாய்லாந்தில் தேர்தல், இராணுவம் மீண்டும் ஏமாற்றுமா?

இன்று ஞாயிறு தாய்லாந்தில் இன்னுமோர் தேர்தல் இடம்பெற்றுள்ளது. வழமைபோல் இம்முறையும் இராணுவ சார்பு கட்சி தோல்வியுற, சாதாரண கட்சி பெரும் வெற்றியை அடையும் என கனிக்காடுகிறது.

ஆனால் தோல்வியுறும் இராணுவம் வழமைபோல் மீண்டும் தேர்தல் முடிவை புறக்கணித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா என்பதை  வரும் நாட்கள் கூறும்.

முன்னைய தேர்தல்களில் இராணுவம் வெற்றி பெறும் கட்சியிடமிருந்து ஆட்சியை பறித்து, வெற்றிபெறும் கட்சியையும் தடையும் செய்திருந்தது. 2006ம் ஆண்டு இராணுவத்துக்கு எதிராக போட்டியிட்டு வென்று இருந்த Thaksin Shinawatra தற்போதும் வெளிநாட்டில் (லண்டன், டுபாய்) தஞ்சம் அடைந்துள்ளார். அவரின் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டில், எட்டு ஆண்டுகளின் பின், Thaksin னின் சகோதரி Yingluck தேர்தல் வெற்றியையும் இராணுவம் பின்னர் பறித்து இருந்தது. இதுவரை இராணுவமே அங்கு ஆட்சி செய்தது.

தற்போது 36 வயதுடைய Paetongtarn என்ற Thaksin னின் மகளின் கட்சி பெரு வெற்றியை அடையவுள்ளது. இவரின் வெற்றியும் பறிக்கப்படுமா என்பது வரும் தினங்களில் தெரியவரும்.

இராணுவம் எழுதிய தாய்லாந்து சாசனப்படி 250 senate ஆசனங்களை இராணுவம் நியமிக்கும். இவர்களுக்கு பாராளுமன்றத்தில் வாக்களிக்க உரிமை உண்டு.

இராணுவ senate ஆதரவு இல்லாத கட்சி அங்குள்ள மொத்தம் 500 ஆசனங்களில் குறைந்தது 376 ஆசங்களை வென்றால் மட்டுமே இராணுவத்தின் பிடியில் இருந்து சுதந்திரம் ஆகலாம். அதையும் இராணுவம் குழப்பலாம்.