YouTube வீடியோவுக்காக விமானத்தை மோதியவர் அகப்பட்டார்

YouTube வீடியோவுக்காக விமானத்தை மோதியவர் அகப்பட்டார்

YouTube, Facebook எங்கும் பெருகி வருவது பொய்யான வீடியோக்களும், தகவல்களும். பலர் திரைப்படம் தயாரிப்பது போல் வியக்க வைக்கும் வீடியோக்களை தயாரித்து அவற்றை இயற்கையில் இடம்பெற்ற சம்பவம் என்று பெரும் தொகை மக்களை பார்கவைத்து பெரும் பணமும், புகழும் அடைய முனைகின்றனர்.

அமெரிக்க விமானியாக 29 வயதுடைய Trevor Jacob என்பவர் தனது சிறிய விமானத்தை YouTube வீடியோ ஒன்றுக்காக திட்டமிட்டு நிலத்தில் மோதவிட்டு தற்போது அதிகாரிகளிடம் அகப்படுக்கொண்டார்.

இந்த மோதல் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்றாலும் இதுவரை அதை Jacob ஒரு விபத்து என்றே பொலிஸாருக்கு கூறிவந்துள்ளார். அனால் இன்று வியாழன் தான் விமானத்தை திட்டமிட்டு மோதியதை ஒத்துக்கொண்டுள்ளார். இந்த குற்றத்துக்கு இவர் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறலாம்.

கலிபோர்னியாவின் Santa Bárbara விமான நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த இவர் ‘விபத்து’ போல இருக்கவுள்ள நாடகத்தை படம்பிடிக்க பல வீடியோ கருவிகளை விமானம் எங்கும் பூட்டியிருந்தார். நடுவானில் விமானத்தில் இருந்து பரசூட்டுடன் குதித்து விமானத்தை மட்டும் நிலத்தில் மோத விட்டார்.

விமானம் Los Padres தேசிய வனத்தில் மோதியுள்ளது. Jacob பின்னர் வேறு ஒரு ஹெலியில் மோதிய இடம் சென்று தடயங்களை அழித்துள்ளார்.

இவரின் YouTube வீடியோ 2.9 மில்லியன் பார்வைகளை பெற்றது. அதற்கேற்ப அவரும் பணம் பெற்றார். விமானத்துக்கான காப்புறுதி பணத்தையும் பெற்றாரா என்பது இதுவரை அறியப்படவில்லை.

இவரின் விமானிகள் அனுமதி பாத்திரம் தற்போது பறிக்கப்பட்டுள்ளது.