செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரானை, வயது 70, உடனடியாக விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் இன்று வியாழன் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் National Accountability Bureau செய்த இந்த கைது சட்டத்திற்கு முரணானது என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அதேவேளை இம்ரானின் PTI (Pakistan Tehreek-e-Insaf) கட்சி தலைவர் தொடர்ந்தும் காவலில் வைக்கப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
இம்ரான் தனது ஆதரவாளர்களை அமைதியாக இருக்கும்படி கூறவும் உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. உயர் நீதிமன்றம் இம்ரானை விடுதலை செய்ததை அவரின் கட்சி ஒவ்வொரு நகரங்களிலும் கொண்டாடவுள்ளது.
இம்ரான் கைதின் பின் இடம்பெற்ற வன்முறைகளுக்கு இதுவரை சுமார் 11 பேர் பலியாகியும் 2,500 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.