ரஷ்யாவின் தலைநகரில் உள்ள கிரெம்ளின் (Kremlin) மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என்று ரஷ்யா இன்று வியாழன் கூறியுள்ளது. அத்துடன் இந்த தாக்குதல் பூட்டினை படுகொலை செய்ய செய்யப்பட்டது என்றும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
ஆளில்லா விமானம் (drone) மூலம் செய்யப்பட்ட இந்த தாக்குதல் புதன் காலையில் இடம்பெற்றது. இந்த தாக்குதல் பாரிய சேதம் எதையும் விளைவிக்கவில்லை.
இந்த drone Senate Palace என்ற பூட்டினின் வதிவிடத்தை நோக்கியே சென்றுள்ளது.
யுக்கிறேன் யுத்தத்தில் அமெரிக்கா மீது ரஷ்யா சுமத்தும் பாரிய குற்றச்சாட்டு இதுவாகும்.
இந்த குற்றச்சாட்டை அமெரிக்காவின் பேச்சாளர் Jon Kirby வெறும் பொய் (just lying) என்றுள்ளார். யூக்கிறேன் அதன் எல்லைகளுக்கு அப்பால் தாக்குவதை அமெரிக்கா ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிரியின் drone இவ்வாறு மாஸ்கோ வரை தடையின்றி செல்ல முடியும் என்றால் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.