அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி வீதம் நேற்று 0.25% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் அது தற்போது 5.25% ஆக உள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் இது அதிகம்.
மிக நீண்ட காலமாக ஏறக்குறைய 0% ஆக இருந்த அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி வீதம் கடந்த 14 மாதங்களில் 10 தடவைகளில் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் நிலவும் பணவீக்கமே அரசு வட்டியை அதிகரிக்க காரணமாகி இருந்தது.
வட்டி அதிகரித்ததால் வீடு, கார் போன்ற கடன் கொள்வனவுகளின் வட்டி செலவுகள் அதிகமாகி உள்ளன. வர்த்தகங்களும் கடனை பெறுவது கடினமாகும். இது நாட்டின் பொருளாதாரத்தை மந்தம் அடைய செய்யும்.
அமெரிக்க வட்டி அதிகரித்தால், அதனுடன் நெருங்கிய வர்த்தக தொடர்புகளை கொண்ட நாடுகளும் வட்டியை அதிகரிக்க நேரிடும்.