சிங்கப்பூர் அரசு தங்கராஜு சுப்பையா என்ற 46 வயது நபருக்கு போதை கடத்தல் காரணமாக மரண தண்டனை நிறைவேற்றி உள்ளது. பிரித்தானியாவின் செல்வந்தர் Richard Branson உட்பட பல மனித உரிமைகள் குழுக்கள் தங்கராஜுவின் மரண தண்டனையை கைவிட கேட்டிருந்தும் சிங்கப்பூர் மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது.
இவருக்கான மரண தண்டனை சிங்கப்பூரின் கிழக்கே உள்ள Changi சிறைச்சாலையில் நிறைவு செய்யப்பட்டது.
2018ம் ஆண்டு தங்கராஜு 1 kg (2.2 இறத்தல்) போதையை சிங்கப்பூருள் எடுத்து வந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
சிங்கப்பூர் அரசு செய்த கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றில் 83% சிங்கப்பூர் மக்கள் போதை கடத்தலுக்கான கட்டாய மரண தண்டனை போதை கடத்தலை தவிர்க்க உதவுகிறது என்றும், 65.6% மக்கள் கட்டாய மரண தண்டனை அவசியம் என்றும் கூறியுள்ளனர்.
1973ம் ஆண்டில் இருந்து 1975ம் ஆண்டு வரையான காலத்தில் சிங்கப்பூரில் heroine பாவனையாளரின் தொகை 200 மடங்கால் அதிகரித்தது என்றும் அக்காலத்திலேயே போதை கடத்தலுக்கான கட்டாய மரண தண்டனை அறிமுகம் செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இன்று உலகில் போதை பாவனை மிக குறைந்த நாடாக சிங்கப்பூர் உள்ளது.
2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் திகதி நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற மலேசிய வாசி ஒருவர் சிங்கப்பூரில் போதை கடத்தல் காரணமாக மரண தண்டனையை பெற்று இருந்தார்.