இந்தியாவில் 36 பேர் கிணற்று மூடி உடைந்ததால் பலி

இந்தியாவில் 36 பேர் கிணற்று மூடி உடைந்ததால் பலி

இந்திய மத்திய பிரதேச மாநிலத்து Indore என்ற நகரில் இடம்பெற்ற ராம் நவமி நிகழ்வின்போது கிணற்று மூடி ஒன்று பாரத்தால் உடைய, அதில் இருந்தோர் உள்ளே விழுந்து உள்ளனர். அவர்களில் குறைந்தது 36 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் 18 பேர் வைத்தியசாலைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர்.

Beleshwar Mahadev Jhulelal என்ற ஆலயத்தில் இருந்த சுமார் 40 அடி (12 மீட்டர்) ஆழ கிணறு ஒன்றுக்கு சீமெந்து மூடி இருந்துள்ளது. விழாவுக்கு வந்த மக்கள் இந்த மூடி மேலே ஏறி இருந்துள்ளனர். மிகையான பாரத்தால் மூடி உடைந்துள்ளது.

மரணித்தோருக்கு 500,000 இந்திய ரூபாய்களையும் ($6,000), காயமடைந்தோருக்கு 50,000 ரூபாய்களையும் வழங்க மாநில அரசு முன்வந்துள்ளது.

2022ம் ஆண்டு பெப்ரவரி மாதமும் உத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்வு ஒன்றின்போது கிணற்று மூடி ஒன்று உடைந்ததால் அதில் இருந்த 13 பேர் பலியாகி இருந்தனர்.