கடந்த சில தினங்களாக இலங்கை நாணயத்தின் பெறுமதி வேகமாக அதிகரித்து வந்துள்ளது. ஆனால் இந்த அதிகரிப்பு தற்காலிகமானது என்றும், ஆண்டின் இறுதியில் இலங்கை ரூபா மீண்டும் பெறுமதியை இழக்கும் என்றும் அமெரிக்காவை தளமாக கொண்ட Fitch நிதி சேவைகள் அமைப்பு கூறியுள்ளது.
IMF இலங்கைக்கு $2.9 பில்லியன் கடன் வழங்கும் என்ற நம்பிக்கையிலேயே இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பதாகவும் காரணம் கூறப்பட்டுள்ளது.
இன்று புதன் டாலர் ஒன்றுக்கு 317 ரூபாய் கிடைத்தாலும், Finch கூற்றுப்படி இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 390 ரூபாய் ஆக இலங்கை ரூபாயின் நாணய மாற்று விகிதம் இருக்கும்..
இலங்கைக்கு தற்போது சுமார் $51 பில்லியன் கடன் உள்ளது. அந்த கடனை அடைக்க அடுத்த 7 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு $6 முதல் $7 பில்லியன் வரை தேவைப்படும்.