The Associated Press (AP) இன்று பலஸ்தீனர் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை விபரித்து சிறு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
1998ம் ஆண்டு Shivi Drori என்ற பெண் இஸ்ரேல் இராணுவத்தில் தனது கடமையை முடித்து வெளியேறிய உடனே 3 இழுத்து செல்லும் வாகன வீடுகளை (trailers) கொள்வனவு செய்து, இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள பலஸ்தீனரின் West Bank இடமொன்றில் raspberry என்ற பழம் பயிரிட ஆரம்பித்தார். இது சட்டவிரோத குடியிருப்பு என்றாலும் இஸ்ரேல் இராணுவம் இவருக்கு பாதுகாப்பை வழங்கி வந்தது. இஸ்ரேல் அரசு மேலதிக வசதிகளை செய்து வந்தது.
இந்த சட்டவிரோத குடியிருப்பு படிப்படியாக இஸ்ரேல் ஆதரவுடன் பெருகி வந்தது. தற்போது 49 வயது கொண்ட Drori குடும்பம் உட்பட 90 குடும்பங்கள் இங்கு சட்டவிரோதமாக குடியேறி உள்ளன. இந்த இடத்துக்கு Givat Harel என்றும் பெயரிடப்பட்டு உள்ளது.
கடந்த கிழமை இனவாத Netanyahu அரசு Givat Harel என்ற குடியிருப்பு உட்பட 9 சட்டவிரோத குடியிருப்புகளை சட்டப்படியான குடியிருப்புகள் ஆக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறே இஸ்ரேல் மெல்ல பலஸ்தீனர் இடங்களை 1967ம் ஆண்டில் இருந்து ஆக்கிரமித்து வருகிறது.
Givat Harel என்ற ஆக்கிரமித்த இடத்துக்கு அருகில் Turmus Aya என்ற பலஸ்தீனர் இடமும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.
ஆக்கிரமித்த West Bank இடங்களில் பலஸ்தீனர் வீடு அமைக்க இஸ்ரேல் அனுமதி வழங்குவது இல்லை. அதையும் மீறி அமைத்தால் அந்த வீடுகள் இஸ்ரேல் இராணுவத்தால் அழிக்கப்படும். ஆனால் யூதர் எங்கு வேண்டுமென்றாலும் சட்டவிரோத குடியிருப்பு அமைக்கலாம். அவை பின்னர் சட்டப்படியான குடியிருப்புகளாக மாற்றப்படும்.
கடந்த கிழமை இஸ்ரேல் கொண்ட ஆக்கிரமித்த இடங்களை சட்டபூர்வமானது ஆக்கும் நடவடிக்கையை கண்டித்து, அதை தடுக்கும் நோக்கில் UAE ஒரு தீர்மானத்தை ஐ.நா. வாக்கெடுப்புக்கு இந்த கிழமை கொண்டுவர இருந்தது. ஆனால் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்த முயற்சியை தடுத்தன. அதற்கு ஐ.நா. அடிபணிந்தது.
பதிலுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு இஸ்ரேல் மேலும் புதிய சட்டவிரோத குடியிருப்புகளை பலஸ்தீனர் இடங்களில் அனுமதிக்காது என்று வாய்ச்சொல் உறுதி மட்டும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இஸ்ரேல் அதையும் பகிரங்கமாக ஏற்கவில்லை. அதனால் பலஸ்தீனர் இடங்களில் சட்டவிரோத குடியிப்புகளை அமைத்தல் மேலும் தொடரும்.
அதேவேளை கனடா போன்ற நாடுகளில் உள்ள தமிழர்களின் வாக்குகளை சில்லறைக்கு கொள்வனவு செய்து அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் சில்லறை தமிழ் அரசியல் புள்ளிகள் சிங்களம் செய்யும் தமிழர் மீதான ஆக்கிரமிப்பை மட்டும் கனடா போன்ற நாடுகள் தடுக்கும் என்று கதை சொல்கிறார்கள். இவர்களுக்கு கனடா போன்ற நாடுகளின் நரித்தந்திர வெளியுறவு கொள்கை புரியாதா, அல்லது வயிற்று பிழைப்புக்காக புரியாத மாதிரி நடிக்கிறார்களா?
கனடா போன்ற நாடுகளின் அரசியல் கட்சிகள் தமிழருக்காக ஊளையிடுவது அவர்களின் வாக்குகளை பெறவே. குறிப்பாக முதலாம் சந்ததி தமிழரின் வாக்குகளை பெற இது அவசியம். இந்த முதலாம் சந்ததி மெல்ல மேல சென்றபின், இந்த அரசியல்வாதிகளின் ஊளையிடலும் மெல்ல நின்றுவிடும்.
2023ம் ஆண்டு கனடா இலங்கையின் மகிந்த, கோட்டா ஆகிய இருவரையும் தமிழரின் வாக்கு பெறும் நோக்கில் தடை செய்துள்ளது. இலங்கையில் யுத்தம் நின்றது 2009ம் ஆண்டு, சுமார் 14 ஆண்டுகளுக்கு முன். அத்துடன் சிங்களமே மேற்படி இருவரையும் விரட்டியபின் இவர்கள் மீண்டும் பதவிக்கு வரார் என்பதே கனடாவின் நரி கணிப்பு. தட்டித்தவறி இவர்கள் மீண்டும் பதவிக்கு வந்தால் கனடா அப்போது தொப்பி பிரட்டி கொப்பு தாவும். இதுதான் இந்திய பிரதமர் மோதிக்கும் நடந்தது.