2022ம் ஆண்டு தென் கொரியாவில் பிள்ளை பெறக்கூடிய தாய் ஒருவருக்கான சராசரி பிறப்பு விகிதம் 0.78 ஆக இருந்துள்ளது. 1970ம் ஆண்டின் பின் இதுவே அந்த நாட்டுக்கான மிக குறைந்த பிறப்பு விகிதமாகும். 2021ம் ஆண்டு இங்கு இது 0.81 ஆக இருந்தது. 2022ம் ஆண்டு இங்கே 249,000 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன.
Seoul என்ற தென் கொரியாவின் தலைநகரில் பிறப்பு விகிதம் 0.59 ஆக மட்டுமே இருந்துள்ளது.
ஒரு நாடு தனது சனத்தொகையை அதிகரிக்காமலும், குறையாமலும் கொண்டிருக்க தாய் ஒன்றுக்கான பிறப்பு விகிதம் 2.1 ஆக இருத்தல் அவசியம்.
2020ம் ஆண்டில் அமெரிக்காவில் பிறப்பு விகிதம் 1.64 ஆகவும், ஜப்பானில் 1.33 ஆகவும் இருந்துள்ளது.
தென் கொரியாவில் குழந்தைகளை பெறும் தாய்மாரின் வயது உயர்ந்தும் செல்கிறது. 2022ம் ஆண்டில் சராசரியாக 33.5 வயதிலேயே பெண்கள் குழந்தைகளை பெற்று உள்ளனர். இதுவும் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைய காரணம்.
இங்கே திருமண எண்ணிக்கையும் வீழ்ச்சி அடைகிறது. 2021ம் ஆண்டில் இங்கே 193,000 திருமணங்கள் மட்டுமே இடம்பெற்றன.