அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் மேலே பறந்த இன்னோர் பறக்கும் பொருளை அமெரிக்க F-22 வகை யுத்த விமானம் இன்று சுட்டு வீழ்த்தியது என்று வெள்ளை மாளிகை இன்று வியாழன் கூறியுள்ளது.
இந்த பறக்கும் பொருள் ஒரு சிறிய கார் அளவிலானது என்றும், சுட்டபின் இது அமெரிக்க கடல் எல்லையுள் வீழ்ந்து உள்ளது என்றும் கூறப்படுகிறது. இது வீழ்ந்த பகுதி கடல் தற்போது உறைந்து உள்ளது.
இந்த பொருள் எந்த நாட்டுக்கு உரியது என்றும், இதன் பயன்பாடு என்ன என்றும் தமக்கு இதுவரை தெரியாது என்று வெள்ளை மாளிகையின் பேச்சாளர் John Kirby கூறியுள்ளார்.
இந்த பொருள் 40,000 அடி (12,190 மீட்டர்) உயரத்தில் பிறந்ததாகவும், அந்த உயரம் பயணிகள் விமானங்கள் பறக்கும் உயரம் என்றும் கூறிய வெள்ளைமாளிகை இப்பொருள் பயணிகள் விமானங்களுக்கு ஆபத்தானதாக இருந்தது என்றும் கூறியுள்ளது.
பெப்ரவரி 4ம் திகதி அமெரிக்கா சீனாவின் பலூன் ஒன்றை சுட்டு வீழ்த்தி இருந்தது. அதை அமெரிக்கா ஒரு உளவு பார்க்கும் பலூன் என்கிறது அமெரிக்கா.