துருக்கி-சிரியா நிலநடுக்க மரண தொகை 7,800

திங்கள் காலை துருக்கி-சிரியா எல்லையோரத்தை தாக்கிய நிலநடுக்கத்திற்கு பலியானோர் தொகை தற்போது 7,800 ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்க அளவீட்டில் 7.8 அளவை கொண்ட இந்த நிலநடுக்கம் 1999ம் ஆண்டுக்கு பின் இங்கு இடம்பெற்ற மிகப்பெரிய நிலநடுக்கமாகும்.

Ganiantep என்ற பகுதியில் முதலில் 7.8 அளவை கொண்ட நடுக்கமும், 7.5 அளவிலான இரண்டாவது நடுக்கம் பின்னரும் இடம்பெற்றுள்ளன.

துருக்கியில் மரணித்தோர் தொகை 5,894 ஆகவும், காயமடைந்தோர் தொகை 34,000 ஆகவும் உள்ளதாக துருக்கியின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். சிரியாவில் மரணித்தோர் தொகை 1,900 ஆக உள்ளது. ஆனால் இறுதி தொகை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அகப்பட்டு உள்ளோரை தேடும் பணியில் 12,000 பேரும் அவர்களுக்கு உதவியாக 9,000 படையினரும் தேடல் பணியில் உள்ளனர். சுமார் 70 நாடுகள் பல்வேறு உதவிகளை செய்கின்றன.

தற்போது இப்பகுதியில் winter காலம் ஆகையால் காப்பாற்றும் பணிகள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றன.

1999ம் ஆண்டு இங்கு இடம்பெற்ற நிலநடுக்கத்துக்கு 18,000 பலியாகி இருந்தனர்.