அமெரிக்காவின் Montana மாநிலத்து வான் பரப்பில் சீனாவின் உளவு பலூன் ஒன்று பறப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த பலூனை நோட்டம்விட அமெரிக்காவின் F22 வகை யுத்த விமானங்கள் சென்றுள்ளன.
இந்த பலூன் 24 km முதல் 37 km உயரத்தில் பார்ப்பதாக கூறப்படுகிறது. U2 தவிர்ந்த யுத்த விமானங்கள் சுமார் 20 km உயரத்திலேயே பறக்கும். பயணிகள் விமானங்கள் சுமார் 12 km உயரத்திலேயே பறக்கும்.
அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் மற்றைய நாடுகளுக்கு மேலால் பறந்து தகவல் சேகரிப்பது உண்டு. Cold war காலத்தில் ரஷ்யாவுக்கு மேலால் பறந்த அமெரிக்காவின் U2 வேவு விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தி இருந்தது.
இன்றைய சீன பலூன் முதலில் கனடாவுக்கு மேலால் பறந்ததாக கூறப்படுகிறது. Montana அமெரிக்க, கனடிய எல்லையோரம் உள்ள மாநிலம்.
சீனாவோ தமது காலநிலை அவதானிப்பு பலூன் ஒன்று பாதை தவறி சென்றுள்ளதாக கூறியுள்ளது.