யுக்கிறேனில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்த உதவுமாறு யுக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கி சீனா சனாதிபதி சீக்கு கடிதம் மூலம் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
இந்த கடிதத்தை செலன்ஸ்கியின் மனைவி Olena Zelenska தற்போது சுவிற்சலாந்தின் Davos நகரில் இடம்பெறும் World Economic Forum அமர்வுக்கு சென்றுள்ள சீன அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.
செலன்ஸ்கி சீன சனாதிபதியை சந்திக்க பலமுறை முனைந்திருந்தாலும் அது நிறைவேறாத நிலையில் அவர் கடிதம் மூலம் அழைப்பை விடுவதாக மனைவி கூறியுள்ளார்.
இந்த அழைப்புக்கு ஒரு பதில் கிடைக்கும் என்றும் செலன்ஸ்கியின் மனைவி கூறியுள்ளார்.
பூட்டினின் யுக்கிரனே மீதான ஆக்கிரமிப்புக்கு மேற்கு நாடுகளையே குற்றம் சாட்டுகிறது சீனா.
ஆண்டு ஒன்று சென்றும் ரஷ்யா யுக்கிறேனில் திடமான யுத்த வெற்றியை அடையாத நிலையில் சீனா தலையிட முனையலாம். ஆனாலும் ரஷ்யா பறித்த இடங்களை கைவிடாமல் பேச எதுவும் இருக்காது.