60 ஆண்டுகளின் பின் சீன சனத்தொகை வீழ்ச்சி

60 ஆண்டுகளின் பின் சீன சனத்தொகை வீழ்ச்சி

1961ம் ஆண்டுக்கு பின் முதல் தடவையாக கடந்த ஆண்டு சீனாவின் சனத்தொகை வீழ்ச்சி அடைந்துள்ளது.

சீனாவின் National Bureau of Statistics வெளியிட்ட அறிக்கையின்படி 2022ம் ஆண்டில் சீனாவின் சனத்தொகை 850,000 ஆல் குறைந்து 1.41175 பில்லியன் ஆக மட்டுமே இருந்துள்ளது.

2021ம் ஆண்டில் ஒவ்வொரு 1,000 பேருக்கும் 7.52 பிறப்புகள் இருந்திருந்தாலும், 2022ம் ஆண்டில் அது 6.77 பிறப்புகளாக குறைந்து உள்ளது. 1962ம் ஆண்டு அளவில் இங்கு பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 40 க்கும் அதிகமாக இருந்துள்ளது.

2022ம் ஆண்டில் சீனாவில் 9.56 மில்லியன் குழந்தைகள் பிறந்து இருந்தாலும், அங்கு 10.41 மில்லியன் பேர் மரணமாகி- உள்ளனர்.

அதேவேளை 2022ம் ஆண்டு இந்தியாவின் சனத்தொகை 1.412 பில்லியன் ஆக இருந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதனால் கடந்த ஆண்டே இந்தியா உலகின் முதலாவது சனத்தொகை கூடிய நாடாக மாறியிருக்கலாம்.

இந்தியா 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கணிக்கப்படுவதால் ஒவ்வொரு ஆண்டுக்குமான இந்திய சனத்தொகை இலகுவில் அறியப்படாது.