Special military operation என்று கூறி யுக்கிரேனுள் நுழைந்த ரஷ்ய படைகள் குறைந்த அளவு வெற்றியையாவது அடையாத நிலையில் தற்போது ஜெனரல் Valery Gerasimov யுத்தத்தை வழிநடத்த அழைக்கப்பட்டுள்ளார். இவர் ரஷ்ய படைகளை வழிநடத்தும் 3ஆவது தலைமை அதிகாரி.
இதுவரை இந்த யுத்தத்தை தலைமை தாங்கிய Sergey Surovikin தற்போது பதவி இறக்கம் செய்யப்பட்டு உள்ளார். சுமார் 3 மாதங்கள் மட்டும் யுத்தத்தை வழிநடத்திய இவர் ஒரு கொடூரமான தளபதி என்று கூறப்பட்டாலும் அவரால் யுத்த வெற்றிகளை அடைய முடியவில்லை.
Surovikin Chechnya, சிரியா ஆகிய இடங்களில் யுத்த வெற்றிகளை கண்டவர். ஆனால் யுக்கிரேனில் உள்ள மேற்கின் ஆயுதங்கள், இராணுவ வேவுகள், ஆலோசனைகள் இவருக்கு இலகுவாக அமையவில்லை.
இந்த யுத்தத்தால் மேற்கும் பாரிய பாதிப்பை அடைகிறது. யுக்கிறேன் தரப்பில் போராடுவது யுக்கிறேன் இராணுவம் என்றாலும் அது பயன்படுத்துவது அனைத்தும் மேற்கின் ஆயுதங்கள், உளவுகள், ஆலோசனைகள். இதனால் மேற்கின் இராணுவ தளபாட கையிருப்பு வேகமாக குறைகிறது. செலவும் மிகையாக அதிகரிக்கிறது.
இதுவரை இரண்டாவது பலமான நாடாக இருந்த ரஷ்யா யுக்கிறேன் யுத்தத்தின் பின் ஒரு படி பின்னெறி மூன்றாவது பலமான நாடாகலாம். இதன் பொருளாதாரம், இராணுவம் இரண்டுமே வீழ்ச்சி அடைகின்றன.