சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சேவையை இந்தியாவின் Alliance Air விமான சேவை டிசம்பர் 12ம் திகதி முதல் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சேவை ஒவ்வொரு கிழமையும் திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நான்கு இடம்பெறும் என்று கூறப்படுகிறது. யாழுக்கு சென்னைக்கும் இடையிலான பயணத்துக்கு சுமார் 1 மணித்தியாலம் 25 நிமிடங்கள் தேவை.
இந்த சேவைக்கான கட்டணம் இந்திய ரூபாய்களில் மட்டுமே தற்போது செலுத்தலாம். Alliance Air இணையத்தில் தற்போது இலங்கை ரூபா அல்லது அமெரிக்க டாலர் மூலம் செலுத்தும் வசதி இல்லை. அதனால் இலங்கையருக்கு நாணய மாற்று செலவும் ஏற்படலாம்.
முதல் நாளான 12ம் திகதி சென்னை-யாழ் கட்டணம் தற்போது 6,702 இந்திய ரூபாய்களாக உள்ளது (சுமார் $82.00).
ஆனால் யாழ்-சென்னை கட்டணம் 9,200 இந்திய ருபாய் ஆக உள்ளது, அது சுமார் 41,818 இலங்கை ரூபா (சுமார் $114.00). பண சந்தையில் தற்போது 1 இந்திய ரூபாய் 4.47 இலங்கை ரூபாய் ஆக உள்ளது.
2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த Alliance சேவை COVID காணரமாக இதுவரை இடைநிறுத்தப்பட்டு இருந்தது.
Alliance Air விமான சேவை முன்னர் Air India விமான சேவையின் அங்கமாக இருந்தது. ஆனால் அண்மையில் Air India விமான சேவை Tata நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டபின் Alliance Air ஒரு தனி நிறுவனமாக இயங்குகிறது. Alliance சேவையிடம் 21 நடுத்தர அளவிலான விமானங்கள் உண்டு.
Alliance Air பெங்களூர், டெல்லி, ஹைதராபாத், கல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களை தளமாக கொண்டு சேவை செய்கிறது. யாழ்ப்பாணத்தை தவிர ஏனைய சேவைகள் அனைத்தும் இந்தியாவுக்குள் மட்டுமே செய்யப்படுகின்றன.