அமெரிக்க சனாதிபதி பைடெனும், ரஷ்ய சனாதிபதி பூட்டினும் யூக்கிறேன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க பச்சைக்கொடி காட்டி உள்ளனர்.
வெள்ளைமாளிகை சென்றுள்ள பிரெஞ்சு சனாதிபதி மக்ரானுடன் உரையாடிய பின்னரே பைடென் வியாழக்கிழமை இந்த அறிவிப்பை செய்துள்ளார். பூட்டின் செய்த வன்முறைகளுக்கு அவரே பொறுப்பு என்றாலும் யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர தான் பூட்டினுடன் பேச தயார் என்று பைடென் கூறியுள்ளார். பைடென் தான் “looking for a way to end the war” என்றுள்ளார்.
பூட்டின் பேச்சுவார்த்தையில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்றும், பூட்டின் விரும்பினால் தான் பேச தயார் என்றும் மேலும் பைடென் கூறியுள்ளார்.
பைடெனும், மகிரானும் சுமார் 3 மணித்தியாலங்கள் மூடிய அறையில் இருந்து பேசி இருந்தனர்.
பூட்டினும் கிரைமியா போன்ற பகுதிகளை ரஷ்யாவின் அங்கம் என்பதை மேற்கு ஏற்று கொண்டால் தானும் பேச தயார் என்றுள்ளார். ஆனால் கிரைமியாவை ரஷ்யாவின் அங்கம் என்று ஏற்பது மேற்குக்கு மிக கடினமான விசயமாகும்.
மேற்கு நாடுகளை நம்பி பூட்டனுடன் சண்டைக்கு சென்ற யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கி வேறு வழியின்றி மேற்கு நாடுகள் கூறுவதை செய்ய தள்ளப்படலாம். அத்துடன் கடந்த 9 மாதங்களாக இடம்பெற்ற அழிவுகள், இழப்புகள் விரயம் ஆகலாம்.
யூக்கிறேனில் ரஷ்ய இராணுவம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அதேவேளை மேற்கு நாடுகளும் தொடர்ந்தும் பல பில்லியன் பெறுமதியான உதவிகளை செய்ய முடியாது.
அத்துடன் அமெரிக்கா வேகமாக வளரும் சீனா மீதே முழு கவனத்தையும் செலுத்த விரும்புகிறது.