நைஜீரியாவின் Lagos நாகரில் இருந்து ஐரோப்பா நோக்கி 3 ஆண் அகதிகள் எண்ணெய் கப்பல் ஒன்றின் சுக்கானில் பயணித்துள்ளனர். Las Palmas என்ற துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருந்த இவர்களை ஸ்பெயின் நாட்டு காவல் அதிகாரிகள் மீட்டு உள்ளனர். தற்போது இவர்கள் மூவரும் Canary தீவு வைத்தியசாலையில் மருத்துவம் பெறுகின்றனர்.
Alithini II என்ற மேற்படி எண்ணெய் கப்பல் நவம்பர் மாதம் 17ம் திகதி தனது பயணத்தை நைஜீரியாவில் இருந்து ஆரம்பித்து உள்ளது. ஆனால் இவர்கள்மூவரும் 29ம் திகதியே மீட்கப்பட்டனர். இவர்கள் மூவரும் dehydration, hypothermia போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி இருந்தனர்.
இதற்கு முன்னர், 2020ம் ஆண்டும் நைஜீரியாவில் இருந்து பயணித்த இரண்டு எண்ணெய் கப்பல்களில் 6 அகதிகள் ஸ்பெயினுக்கு பயணித்து இருந்தனர். இரண்டு கிழமைகள் பயணித்த அக்குழுவில் ஒருவர் 14 வயது பையன்.
கப்பலின் சுகானில் சிறிய மேற்பரப்பே உள்ளதால் ஒருவர் மட்டுமே ஒரு நேரத்தில் உறங்க முடியும். ஏனையோர் தமது நீரம் வரும்வரை விழித்து இருப்பார். கடல் நீரையே குடிப்பர்.
படம்: EFE Canarias